Final Words !

நான் உன்னை அணைத்த போது,

கண்ணிருந்தும் குருடானேன்,
காதிருந்தும் செவிடானேன்,
வாயிருந்தும் ஊமையானேன்,
தூங்கிய பின்னும் கனவை இழந்தேன்!

நீ என்னை கண்டவுடன்,

மேளமொன்றிசைத்து,
மலர் மஞ்சம் தந்தாய் !
மஞ்சள் நீராடிய,
நெல் கொஞ்சம் தந்தாய்!
சங்குகள் முழங்க,
பறைகள் ஓலிக்க,
மாலை பல சூடி,
மரியாதை தந்தாய்!

நான் உன்னுடன் வர,

சொந்தங்கள் இழந்தேன்,
எண்ணங்கள் துறந்தேன்,
என்னையே நானே,
முழுமையாய் மறந்தேன்!
தீயிலே எறிந்தேன்,
காற்றிலே கலந்தேன்,
என் வீட்டில் நானே,
இறைவனாய் மலர்தேன்!

சொந்தங்களை பிரிக்க,
என்ன வரம் பெற்றாய் ?
கண்ணீர் மழை பொழிய,
எங்கு விதை கற்றாய் ?

எந்த ஒரு வீரனும்,
உன் முன்னால் கோழையே!
உன்னை எதிர்த்து போரிட,
முடியாத நான் ஒரு ஏழையே!

கொடுமை செய்ய பிறந்தாயே,
உயிரை தின்று வளர்ந்தாயே,
உறவை முறித்து சிரித்தையே,
நீயும் ஒரு நாள் இறப்பையே!

ஏய் மரணமே, உனக்கு சாவே கிடையாதா ?

I have never seen death so close. It struck my cousin when he was just 23. I was 20 then. I did not have the maturity to face death. I did not cry. I just did write. This one is for him !

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter