Why brilliant people are running out of India??
https://www.facebook.com/photo.php?v=448459595260967&set=vb.122797761261424&type=2&theater கடந்த சில நாட்களாக இந்த காணொளி என் நண்பர்களின் சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இவர் சிவா. "E-mail" ஐ கண்டுபிடித்தவர். என் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நான் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைய வேண்டிய செய்தி. ஆனால், இந்த காணொளியை பார்த்த பிறகு எனக்கு இது மிகுந்த வருத்தத்தையே தருகிறது. இரண்டு காரணங்கள், 1) படைபவருக்கு சுதந்திரமின்மை - இது புதிதல்ல. எல்லா நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் இது இருந்து கொண்டு தான் இருக்கிறது. 2) போலி தேசப்பற்று - இங்கே இவர் கூறவது போல் தன் நாட்டின் மீது இவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், மூன்றே மாதங்களில் இவர் அமெரிக்க திரும்பி இருக்க மாட்டார். எவ்வளவு தடைகள் வந்திருந்தாலும், தான் நினைத்ததை செய்து காட்டி இருப்பார். மாற்றத்தை நீ விரும்பினால், நீயே அந்த மாற்றமாக இரு என்றார் காந்தி. அவர் இந்தியா வந்த பொழுது, ஆங்கிலேயர் நம்மை அடக்கி ஆண்ட காலம். என்னை வழக்கறிஞராக ஆங்கிலேயர் மதிக்கவில்லை என்று அவர் எண்ணியிருந்தால், இ...