தமிழ் மொழியே இந்தியாவின் முதல் மொழி

முன்னுரை: தமிழ் பிராமி காலம் - 300 கி.மு. (பொருந்தலில் கிடைத்த 490 கி.மு. தமிழ் பிராமி எழுத்துக்களை சேர்க்காமல்). வடமொழி பிராமி காலம் - 150 - 100 கி.மு. தமிழ் மொழியின் முதல் எழுதுகை - 200 கி.மு. வட மொழியின் முதல் எழுதுகை - 150 கி.பி. தமிழில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - சோழர் கால பனை ஓலைகள் வடமொழியில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - 15 ஆம் நூற்றாண்டு (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வடமொழி நூற்பிரதியை வெளியிடுவதாகத் தகவல்). இப்படி தமிழுக்கு பிற்காலத்தில் இருக்கும் வடமொழி எப்படி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் முந்தையதாகும் ? இங்குதான் ஐரோப்பிய ஆய்வாளர்களின் அறியாமையும் வடமொழி மாமாக்களின் சூழ்ச்சியும் அடங்கியுள்ளது. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம்: இந்தியா ஐரோப்பியர்களின் பிடியில் இருந்தபோது, ஆராய்ச்சிக்காக வந்த ஐரோப்பியர்கள் இந்திய மொழிகளையும், இந்திய மொழி இலக்கியங்களையும் கண்டு வியந்தனர். குறிப்பாக வடமொழி அவர்களின் கவனத்தை ஈர்த்தது. காரணம் - ஐரோப்பிய மொழிகளுக்கும் வடமொழிக்கும் இருக்கும் ஒற்றுமை மட்டுமல்ல, கலாச்சார ஒற்றுமையும் தான். இதன் பின்னரே இந்...