நின்னாமன் கூற்று
நிலம் சுமக்கும் நிலையற்ற மாந்தர் நிலைப்பெற நிகரிலா உனை நிகமெனக் கருதி நினைந்து நைந்து நிதம் நிணறொடு நின் புகழ் பாடி நிகருவம் கொண்டு நிகல மயிர் தரித்து நிடலம் நீராடி நின்மலியின் கீழ் நிற்காதமர்ந்து நிட்டை கூடி நிலை மறந்து நிகிலமுணர்ந்து நிசிந்தன் நாமம் நிரதியொடுரைத்து நிறைவுக் காண நிறைகுடமாயவரை நிறைத்து நிவிர்த்தி நிலைக்க வைப்பதும் நின்னாமன் கூற்றே !