Posts

Showing posts from July, 2013

மனிதம் இனி மெல்லச் சாகும் !

மனிதம் இனி மெல்லச் சாகும்: நல் தரிகெட்டுத் திரியும் தர்க்கரும்,  சொல் நெறிகெட்டுத் திரியும் பித்தரும்,  புழுத்தின்னும் நிலையற்ற வாழ்க்கையை,  செல்வச் செருக்கொடு களிப்புடன் கழித்திட, தற்குறி அறிவிலி வறியர் என்றும், கிழோர் அழகிலி காடோடி என்றும்,  புனிதனை இழித்துரைத்துப் பழிசுமத்தி,  குழிபுதைத்து அழுக்கென்று ஒழித்திட,  நித்தமும் நர்த்தனம் பயிலும் சொக்கனும்,  அச்சந்தவிர்த்தரவந்தழுவித் துயிலும் அத்தனும், சித்தமும் சொப்பனமாய் கரைந்தோடும்பொழுது, அவர் யாது செய்வதென அறியாது விழித்திட, அகந்தை அகங்காரம் அடங்காமையுடன், வஞ்சமும் பஞ்சமும் தஞ்சம் புகுந்து,  இகழ்ச்சி தாழ்ச்சி பல பேசி சூழ்ச்சியால்,  மதம் பணம் வதைக்க மனிதம் சாகிறது,  தினம் தினம் அதைக் கண்டு மனம் நொந்து,  மெதுவாய் அழிந்து கொண்டிருக்கும் உலகம், நம்மை முழுதாய் விழுங்கும் நாள் கண்டு, காத்திருக்கும் மனிதர்களில் ஒருவன் நான் ! - இளவழுதி  Humanity shall now die: The unruly, the untamed and the unvirtuous, The hypocrite, the amoral and the deceitful, Fill their little precarious maggot-eaten lives, With greed, riches, h

Why brilliant people are running out of India??

https://www.facebook.com/photo.php?v=448459595260967&set=vb.122797761261424&type=2&theater கடந்த சில நாட்களாக இந்த காணொளி என் நண்பர்களின் சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இவர் சிவா. "E-mail" ஐ கண்டுபிடித்தவர். என் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நான் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைய வேண்டிய செய்தி. ஆனால், இந்த காணொளியை பார்த்த பிறகு எனக்கு இது மிகுந்த வருத்தத்தையே தருகிறது.  இரண்டு காரணங்கள்,  1) படைபவருக்கு சுதந்திரமின்மை - இது புதிதல்ல. எல்லா நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் இது இருந்து கொண்டு தான் இருக்கிறது.  2) போலி தேசப்பற்று - இங்கே இவர் கூறவது போல் தன் நாட்டின் மீது இவருக்கு உண்மையிலேயே அக்கறை  இருந்திருந்தால், மூன்றே மாதங்களில் இவர் அமெரிக்க திரும்பி இருக்க மாட்டார். எவ்வளவு தடைகள் வந்திருந்தாலும், தான் நினைத்ததை செய்து காட்டி இருப்பார்.  மாற்றத்தை நீ விரும்பினால், நீயே அந்த மாற்றமாக இரு என்றார் காந்தி. அவர் இந்தியா வந்த பொழுது, ஆங்கிலேயர் நம்மை அடக்கி ஆண்ட காலம். என்னை வழக்கறிஞராக ஆங்கிலேயர் மதிக்கவில்லை என்று அவர் எண்ணியிருந்தால், இன்று அவர் மகாத