Posts

Showing posts with the label மொழி

தமிழ் மொழியே இந்தியாவின் முதல் மொழி

Image
முன்னுரை: தமிழ் பிராமி காலம் - 300 கி.மு. (பொருந்தலில்  கிடைத்த 490 கி.மு. தமிழ் பிராமி எழுத்துக்களை சேர்க்காமல்). வடமொழி பிராமி காலம் - 150 - 100 கி.மு. தமிழ் மொழியின் முதல் எழுதுகை - 200 கி.மு. வட மொழியின் முதல் எழுதுகை - 150 கி.பி. தமிழில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - சோழர் கால பனை ஓலைகள் வடமொழியில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - 15 ஆம் நூற்றாண்டு (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வடமொழி நூற்பிரதியை வெளியிடுவதாகத் தகவல்). இப்படி தமிழுக்கு பிற்காலத்தில் இருக்கும் வடமொழி எப்படி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் முந்தையதாகும் ? இங்குதான் ஐரோப்பிய ஆய்வாளர்களின் அறியாமையும் வடமொழி மாமாக்களின் சூழ்ச்சியும் அடங்கியுள்ளது. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம்: இந்தியா ஐரோப்பியர்களின் பிடியில் இருந்தபோது, ஆராய்ச்சிக்காக வந்த ஐரோப்பியர்கள் இந்திய மொழிகளையும், இந்திய மொழி இலக்கியங்களையும் கண்டு வியந்தனர். குறிப்பாக வடமொழி அவர்களின் கவனத்தை ஈர்த்தது. காரணம் - ஐரோப்பிய மொழிகளுக்கும் வடமொழிக்கும் இருக்கும் ஒற்றுமை மட்டுமல்ல, கலாச்சார ஒற்றுமையும் தான். இதன் பின்னரே இந்...

தமிழ் தேசியம் எனப்படுவது யாதெனில் . . .

தமிழ் மொழி தொன்மையானது. முதற்சங்க காலமாக கூறப்படும் கி.மு 9600. முன்பிருந்து வழக்கிலிருந்ததா என்று இதுவரை கண்டறியப்படாதா போதிலும், குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையுடையது தமிழ் மொழி. மதுரை அருகே கீழடியில் கிடைத்த நாணயங்கள், பழனி அருகே பொருந்தலில் கிடைத்த தாழிகள் இதை உறுதி செய்கின்றன. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளில் இருக்கும் எழுத்துக்கள் தமிழ்-பிராமி என்று உறுதி செய்யப்பட்டாலே, தமிழ் மொழி 3800 ஆண்டுகள். தொன்மையானதாகீவிடும். குமரிக்கண்டம் மட்டும் நிரூபிக்கப்பட்டால், முதற்சங்க காலத்தையும் எட்டிவிடும் தமிழ் மொழி. இந்தியநாட்டில் வழக்கிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழியே தொன்மையானது. தமிழில் பிறமொழி கலப்பின்று, ஆதி நாகரீகங்கள் பற்றியும் உரையாடலாம், நாளைய அறிவியலும் பேசலாம். நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் வளரும் போதிலும், தன் வேர்களை மறவாத மரமாய் வாழும் உன்னத மொழி தமிழ். ஆனால், இந்தத் தமிழ் மொழி மீது காதலும் பற்றும் கொண்டால், இன்றைய இந்திய அவனுக்களிக்கும் பெயர் இனவெறியன். தமிழ் தேசியம் பேசுபவனை பிரிவினைவாதி என்றும், தமிழர் உரிமைக்காக போராடுபவர்களை த...

தமிழா !

எரிந்த உடலும், எரித்த கனலும், அணைந்த பின்பு எஞ்சும் தணலும், அறிந்த உறவும், மரித்த உயிரும், இணைந்து பிறந்த இயற்பெயரும் எதுவும் உனக்கு சொந்தமில்லை, உடைமை என்று ஒன்றுமில்லை. தெரிந்த உருவம் மறைந்த பிறகு, தெளிந்த சிந்தனை மங்கும் பொழுது, கற்றதது பெற்றது கொண்டது வென்றது, வந்தது போனது கண்டது எங்கது ? பயின்ற பல்கலை, மணந்த வல்லவை, ஈன்ற மதலை, அவள் வாய் மழலை, ஆறடி ஆடி ஓய்கின்ற பொழுது, நூறடி ஓடி கானலாய் போனது. அன்னையும் தந்தையும் தந்த இவ்வுருவம், அவரையும் விழுங்கும் மாயை இவ்வுலகம், மண்ணையும் உன்னையும் தந்த நல்லிறையும், மின்னும் வண்ண விண்ணகம் சென்றொழியும். நிலையற்ற உலகில் வாழும் சில காலம், தேடி நாம் அலைவது ஓர் அடையாளம். நல்லறமும் இனமும் பைந்தமிழ்நாடும், குறளுங் கொடுத்த மொழியே அடையாளம். கல்தோன்றி மன்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய குடியை, குழிதோண்டி இந்தியன் புதைக்க, சங்கம் வளர்த்த தமிழ்மொழியை ஆங்கிலமும் இந்தியமும் சேர்ந்து சங்கொலித்து பாடையிலேற்ற, தமிழ் தெரியாதென்று மார்தட்டும், மடையனாய் போனான் தமிழன். ஆங்கிலமும் இந்தியமும் பெருமை, தமிழும் குறளும் இனமும் சிறும...