பிரபாகரன்

தலைவர் பிரபாகரன் பற்றி...

கடந்த சில ஆண்டுகளாக நான் கண்ட சில முகப்புத்தகப் பதிவுகளையும், என்னிடம் சிலர் கேட்ட கேள்விகளையும்  கேள்வி-பதிலாக தொகுத்துள்ளேன். இந்தப் பதிவை தமிழில் இடுவதா ஆங்கிலத்தில் இடுவதா என்று சிந்தித்தபோது, முதலில் நம்மவர்களுக்கு புரிதலை ஏற்படுத்துவோம் என்று தோன்றியது. சரி கேள்வி-பதிலுக்குச் செல்வோம்.

கேள்வி: என்னய்யா எப்பொழுது பார்த்தாலும் பிரபாகரன் பிரபாகரன் என்றே பிதற்றி கொண்டிருக்கிறீர்?
பதில்: தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரின் நாவில் இருக்கும் பெயர்தானே.



கே: என்னய்யா தமிழ் தேசியம்? பிரபாகரனை தவிர தமிழ் தலைவர்கள் எவரும் இல்லையா ?
ப: தலைவர் பிரபாகரனை பற்றி பேசுவாதல் தமிழ் தலைவர்கள் வேறுயெவருமில்லை என்று தாங்கள் கருதுவதும் ஏனோ?

கே: ஏன் மற்ற தலைவர்களை பற்றி பேசாமல் இவரை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்குறீர்கள்?
ப: எவரைப் பற்றி பேச வேண்டும் என்ற உரிமை எமக்கு இருக்கிறதல்லவா?

கே: அதற்காக ஒரு ஆயுதம் ஏந்திய தீவிரவாதியை பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டுமா?
ப: ஆயுதம் ஏந்தியவரெல்லாம் தீவிரவாதி என்றால் சேகுவேராவும் சந்திரபோசும் தீவிரவாதிகளா?

கே: அவர்கள் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டனர். அவர்கள் விடுதலை போராட்ட வீரர்கள்.
ப: ஈழத்தின் மீது சிங்களம் செலுத்தியது ஆதிக்கமில்லையா?

கே: அது அவர்கள் உள்நாட்டுச் சண்டை.
ப: அந்த நாட்டை உருவாக்கியவனே ஆங்கிலேயன் தானே?

கே: அதற்காக ஆயுதம் ஏந்த வேண்டுமா?
ப: உரிமைகளை இழந்து, 35 ஆண்டுகள் அறவழியில் போராடி, உடைமைகளையும் இழந்தபின் (Black July 1983) தானே ஆயுதம் ஏந்தினார்கள்.

கே: பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதால் மாண்ட உயிர்கள் எவ்வளவு தெரியுமா?
ப: சிங்களர்களும் இந்தியர்களும் கொன்று குவித்த ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை தெரியுமா?

கே: அந்த ஈழத்தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தியவன்தானே பிரபாகரன் !
ப: அதற்கு சிங்களப்படையினர்களின் கூற்றை தவிர வேறு ஏதும் சான்றுகள் இருக்கிறதா?

கே: குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி ஆயுதம் ஏந்தச் செய்தவர்தான் உங்கள் தலைவர் !
ப: சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி பெறுவதும், துப்பாக்கிகளோடும்  குண்டுகளோடும் இருக்கும் புகைப்படைகள் தான் உங்கள் ஆதாரம்? அவர்கள் போரில் பங்குபெற்றதற்கு சான்றுகள் உள்ளதா? சிறுவர்களுக்கும்  சிறுமிகக்கும் வலுக்கட்டாயமாக பயிற்சி கொடுத்திருந்தாலோ, அவர்களை போரில் ஈடுபடுத்தியிருந்தாலோ தவறு தான். அதை பிரபாகரனே செய்திருந்தாலும் தவறுதான்.

கே: என்னய்யா தவறுகளை ஒப்புக்கொள்கிறீர்?
ப: தவறாக இருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே ? அதுதான் தமிழர் அறம்.

கே: அறம் பேசும் நீர் பிரபாகரன் எதற்கு ராஜிவ் காந்தியை கொன்றான் என்று கூற முடியுமா ?
ப: இந்தியம் பேசும் நீர் ராஜிவ் காந்தியின் இந்தியப் படைகள் ஈழத்தமிழ் பெண்களை வன்புணர்ச்சி செய்தனர் என்று கூற முடியுமா ?

கே: சில படை வீரர்கள் சில நேரங்களில் அத்துமீறுவதுண்டு. இது அனைத்து நாட்டு படைகளுக்கும் பொருந்தும்.
ப: ஒன்றை தவிர. விடுதலைப்புலிகள் மாற்றானின் மனைவியை கவர முயன்றாலோ வன்புணர்ச்சி செய்ய முயன்றாலோ மரண தண்டனை. மது அருந்தினால் படையிலிருந்து நீக்கம். சிங்களர்கள் ஈழத்தமிழ் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்று குவித்த நேரத்திலும் சிங்கள பெண்களை தீண்டாதவர்கள் விடுதலைப்புலிகள். தமிழர் ஒழுக்கம் சார்ந்தவர்கள்.

கே: என்னய்யா தமிழர் தமிழர் எங்குறீர்? சாதி மதங்களால் பிளவுபட்டு கிடப்பவர்கள்தானே.
ப: அவ்வாறு பிளவுபட்டு கிடந்தவர்களை ஒன்றிணைத்து 25 ஆண்டுகள் போராடியவர் தானே பிரபாகரன்.

கே: தோற்றுத்தானே போனார்?
ப: மன்னிக்கவும், இறந்து போனார். விடுதலை பெரும் முன் இறந்து போன சந்திரபோசு தோற்றா போனார்? எம் இனத்தலைவர் மறைந்து போனார். நாங்கள் மறந்து போகவில்லை. தமிழீழம் எங்கள் கனவு, எங்கள் உரிமை.

கே: இப்பொழுது தமிழ் தமிழ் என்று பேசி என்ன செய்ய போகிறீர்? தமிழ் மட்டும் தான் மொழியா? உலகில் வேறு மொழிகள் இல்லையா?
ப: உலகில் 800 கோடி மக்கள் வாழ்கின்றனர். அதில் இருவரை தேர்ந்தெடுத்து உங்கள் தாய் தந்தையர் ஆக்கிக் கொள்வீர்களா?




முப்பது ஆண்டு கால போராட்டம்,
முப்பாட்டன் துவங்கிய போராட்டம்,
முப்பால் மொழி கூறும் நல்வழியில்,
முப்படைகளை நிறுவித் தந்தான்.

உலகமே எதிர்த்து நின்ற போதிலும்,
உறவுகள் முதுகில் குத்திய போதிலும்,
உழைத்தான் தமிழர் உரிமைக்காக,
உயிரையும் துறந்தான் நமக்காக.

எம் உரிமைக்காகவும், நம் இன விடுதலைக்காகவும், உன் குடும்பத்தையும், உன் வாழ்க்கையும், உன் உயிரையும் எமக்குத் தந்த வள்ளலே, நீவீர் என்றும் வாழ்வீர் நம் இனத் தமிழ் பிள்ளைகளின் மனதில்.

மேலும் படிக்க:
http://ilavaluthy.blogspot.in/2015/07/forbidden-history-black-july.html
http://ilavaluthy.blogspot.com/2014/11/tigers-were-more-human-than-we-think.html

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter