கிராமம் !
இயற்கை அன்னை வரைந்து வைத்த வண்ண ஓவியம் !
மொழியில்லாமல் படைக்கப் பட்ட குட்டி காவியம் !
மேதை புலவர் பலர் இதை பாடி வைத்த பாக்கள் ஆயிரம் !
அதை நானும் கொஞ்சம் பாடிட வழிகள் தந்திடும் !
கசந்த வேப்பங்குச்சி ஒடித்து பல் துலக்கி,
கிணற்றில் மீன்களோடு சேர்ந்து குளித்து,
மணக்கும் பழயசாதம் வத்தலோடு உண்டு,
ஆரோக்கியமாய் வாழ்பவர் பல கோடி இங்கு உண்டு !
கருவாச்சியின் நெற்றிப் பொட்டு, தமிழ் கலாச்சாரத்தை காட்டும் !
அவள் அணியும் நெய்தல் பட்டு, தமிழ் கலையின் வளத்தை பாடும் !
பாமரன் சுத்தும் மூங்கில் சிலம்பு, தமிழ் மகனின் வீரத்தை போற்றும் !
அவன் செய்யும் தண்ணீர் பானை, மண்ணுக்கும் உயிர் ஊட்டும் !
பாட்டிசைக்கும் காற்றும்,
கேட்டசையும் நாற்றும்,
என்னை கூட கொஞ்சம்,
ஆடச் சொல்லி கேட்கும் !
மேகம் மூடும் மலையும்.
வெட்டி வைத்த குளமும்,
நிசப்தமான இரவும்,
என்னை ஆதிவாசியை மாற்றும் !
வரவேற்பு வலயம் போடும் தென்னை,
கொலுசு பொட்டு கொள்ளும் பெண்ணை,
காதலிக்கச் சொல்லி கேட்கும் என்னை !
எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளத் தோணும் !
Comments