Posts

Showing posts with the label தமிழர்

ஈழம் - இனப்படுகொலைநாள் - மே18

 தலையில்லாத உடம்பின் கால்களை பற்றிக்கொண்டு அம்மா என்றழைக்கத் தெரியாமல் அழுதான் ஒரு சிறுவன். கை தவறி விழுந்து உடைந்த கண்ணாடி பொம்மை போல் துண்டு துண்டாய் சிதறிக் கிடந்தாள் ஒரு சிறுமி. நரிகளும் நாய்களும் தின்றபின் விட்டுச் சென்ற மிச்சமாய் மார் இரண்டும் அறுபட்டு இறந்தாள் ஒரு மகள். ஆடையும் உயிருமின்றி சடலமாக கிடந்தவளின் உடலை தன் குருதியால் மூடினான் ஒரு அண்ணன். பத்து மாதம் உயிரைச் சுமந்து பெற்றெடுத்த பிள்ளையை பெரும் பிணக் குவியலுக்குள் தேடினாள் ஒரு தாய். பிறக்கவிருந்த பிள்ளை இறந்து விட்டதா என்று இரத்தம் படிந்த கைகளால் வயிற்றைத் தடவினாள் மற்றோரு தாய். ஆண்டுகள் பல உடனிருந்தவளை அரக்கர்கள் பலர் சூறையாட சாகவும்கூட முடியாமல் தவித்தான் ஒரு கணவன். மணந்தவனை மறுநொடி இழந்து மண்ணில் புரண்டு மாரில் அடித்து மரித்துப் போக மனம்நொந்து வேண்டினாள் புது மனைவி. தன்னை தகிக்க வேண்டியவர்களை தான் தகிக்க நேர்ந்ததை எண்ணி தனியாய் தடியை பிடித்திக்கொண்டு தார்பாயில் தன் மக்களை கிடத்தி இழுத்தார் ஒரு முதியவர். உரிமைக்காக உடைமைகளை இழந்து உலகமே எதிர்த்து நின்ற போதிலும் உதிர...

பிரபாகரன்

Image
தலைவர் பிரபாகரன் பற்றி... கடந்த சில ஆண்டுகளாக நான் கண்ட சில முகப்புத்தகப் பதிவுகளையும், என்னிடம் சிலர் கேட்ட கேள்விகளையும்  கேள்வி-பதிலாக தொகுத்துள்ளேன். இந்தப் பதிவை தமிழில் இடுவதா ஆங்கிலத்தில் இடுவதா என்று சிந்தித்தபோது, முதலில் நம்மவர்களுக்கு புரிதலை ஏற்படுத்துவோம் என்று தோன்றியது. சரி கேள்வி-பதிலுக்குச் செல்வோம். கேள்வி: என்னய்யா எப்பொழுது பார்த்தாலும் பிரபாகரன் பிரபாகரன் என்றே பிதற்றி கொண்டிருக்கிறீர்? பதில்: தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரின் நாவில் இருக்கும் பெயர்தானே. கே: என்னய்யா தமிழ் தேசியம்? பிரபாகரனை தவிர தமிழ் தலைவர்கள் எவரும் இல்லையா ? ப: தலைவர் பிரபாகரனை பற்றி பேசுவாதல் தமிழ் தலைவர்கள் வேறுயெவருமில்லை என்று தாங்கள் கருதுவதும் ஏனோ? கே: ஏன் மற்ற தலைவர்களை பற்றி பேசாமல் இவரை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்குறீர்கள்? ப: எவரைப் பற்றி பேச வேண்டும் என்ற உரிமை எமக்கு இருக்கிறதல்லவா? கே: அதற்காக ஒரு ஆயுதம் ஏந்திய தீவிரவாதியை பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டுமா? ப: ஆயுதம் ஏந்தியவரெல்லாம் தீவிரவாதி என்றால் சேகுவேராவும் சந்திரபோசும் தீவிரவாதிகளா? கே: அ...

தமிழ் தேசியம் எனப்படுவது யாதெனில் . . .

தமிழ் மொழி தொன்மையானது. முதற்சங்க காலமாக கூறப்படும் கி.மு 9600. முன்பிருந்து வழக்கிலிருந்ததா என்று இதுவரை கண்டறியப்படாதா போதிலும், குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையுடையது தமிழ் மொழி. மதுரை அருகே கீழடியில் கிடைத்த நாணயங்கள், பழனி அருகே பொருந்தலில் கிடைத்த தாழிகள் இதை உறுதி செய்கின்றன. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளில் இருக்கும் எழுத்துக்கள் தமிழ்-பிராமி என்று உறுதி செய்யப்பட்டாலே, தமிழ் மொழி 3800 ஆண்டுகள். தொன்மையானதாகீவிடும். குமரிக்கண்டம் மட்டும் நிரூபிக்கப்பட்டால், முதற்சங்க காலத்தையும் எட்டிவிடும் தமிழ் மொழி. இந்தியநாட்டில் வழக்கிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழியே தொன்மையானது. தமிழில் பிறமொழி கலப்பின்று, ஆதி நாகரீகங்கள் பற்றியும் உரையாடலாம், நாளைய அறிவியலும் பேசலாம். நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் வளரும் போதிலும், தன் வேர்களை மறவாத மரமாய் வாழும் உன்னத மொழி தமிழ். ஆனால், இந்தத் தமிழ் மொழி மீது காதலும் பற்றும் கொண்டால், இன்றைய இந்திய அவனுக்களிக்கும் பெயர் இனவெறியன். தமிழ் தேசியம் பேசுபவனை பிரிவினைவாதி என்றும், தமிழர் உரிமைக்காக போராடுபவர்களை த...

தமிழா !

எரிந்த உடலும், எரித்த கனலும், அணைந்த பின்பு எஞ்சும் தணலும், அறிந்த உறவும், மரித்த உயிரும், இணைந்து பிறந்த இயற்பெயரும் எதுவும் உனக்கு சொந்தமில்லை, உடைமை என்று ஒன்றுமில்லை. தெரிந்த உருவம் மறைந்த பிறகு, தெளிந்த சிந்தனை மங்கும் பொழுது, கற்றதது பெற்றது கொண்டது வென்றது, வந்தது போனது கண்டது எங்கது ? பயின்ற பல்கலை, மணந்த வல்லவை, ஈன்ற மதலை, அவள் வாய் மழலை, ஆறடி ஆடி ஓய்கின்ற பொழுது, நூறடி ஓடி கானலாய் போனது. அன்னையும் தந்தையும் தந்த இவ்வுருவம், அவரையும் விழுங்கும் மாயை இவ்வுலகம், மண்ணையும் உன்னையும் தந்த நல்லிறையும், மின்னும் வண்ண விண்ணகம் சென்றொழியும். நிலையற்ற உலகில் வாழும் சில காலம், தேடி நாம் அலைவது ஓர் அடையாளம். நல்லறமும் இனமும் பைந்தமிழ்நாடும், குறளுங் கொடுத்த மொழியே அடையாளம். கல்தோன்றி மன்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய குடியை, குழிதோண்டி இந்தியன் புதைக்க, சங்கம் வளர்த்த தமிழ்மொழியை ஆங்கிலமும் இந்தியமும் சேர்ந்து சங்கொலித்து பாடையிலேற்ற, தமிழ் தெரியாதென்று மார்தட்டும், மடையனாய் போனான் தமிழன். ஆங்கிலமும் இந்தியமும் பெருமை, தமிழும் குறளும் இனமும் சிறும...