அட என்னாத்த சொல்வேணுங்கோ !
அன்று வந்ததும் இதே நிலா! ட ட டா !
இன்று வந்ததும் அதே நிலா! ட ட டா !
அன்றைய தமிழ்க் கவிஞனின் கண்ணில் நிலவாய் மாறிப் போன பெண், இன்று படும் அவல நிலை என்ன தெரியுமே ?
நாட்டு சரக்கு நச்சினு தான் இருக்கு,
காணும் இடம் அத்தனையும் கலர் கலர இருக்கு !
தங்க கொடமே, தஞ்சாவூரு கடமே,
மந்திரிச்சி விட்டு புட்ட மலையாள படமே !
என்ன size இது மாமு, ரொம்ப nice கிது !
என்ன வயசு இது மாமு, ஐய ice கிது !
மருமகனின் லீலைகள் போதாதென்று, மாமனாரின் வரிகள் வேறு,
bun bun நீ sweet bun,
butter jam போலே நான் தான்,
உன்தான் மேலே தான் நான்,
ஒட்டி கொள்ள தான் வா !
மிக அற்புதமாக செதுக்கப்பட்ட வரிகள், அதிலும் பாதி ஆங்கிலம்.
அடுத்தவர் எல்லாரையும் விஞ்சியவர். இவர் வர்ணிக்காத உணவு பொருள் ஏதேனும் உண்ட என்று ஆராய்ச்சி நடக்கின்றது.
திம்சு கட்ட, அய் அய் திம்சு கட்ட,
ஏண்டி என்ன கெடுத்து புட்ட !
பப்பளபள பப்பளபள பப்பாளி பழமே !
தத்தளதள தத்தளதள தக்காளி பழமே !
காய்கறி மட்டும் அல்ல,
சிக்கன் கறி, சிக்கன் கறி, சிக்கன் கறி,
இது கோத்தகிரி கோழிக் கறி, மட்டன் கறி !
அடுத்தவர் ஒரு சமையல் அறையை உருவாக்கியவர்,
அண்டங் காக்கா கொண்டக்காரி,
அச்சு வெல்ல தொண்டகாரி,
IR 8 பல்லுக்காரி, அயிர மீனு கண்ணுகாரி !
சற்று புளி இருந்தால் சமைத்தே விடலாம்! இப்படி பெண்களை பாடி பாடிப் பழத் தோட்டமாகவும், மளிகை கடையாகவும் மாற்றிய பெருமை பலருக்கு உண்டு .
பால் பாப்பாளி, வெள்ள தக்காளி ! என்றும்
Apple பெண்ணே நீ யாரோ ? Icecream சிலையே நீ யாரோ ? என்று ஆண்கள் பாடிகொண்டிரிக்க, பெண்களின் வரிகள் காதை குளிர வைக்கின்றன !
சாப்பிட வாட, என்ன சாப்பிட வாட! என்று மன்மதனை அழைக்கும் பெண் ஒரு புறம்.
கட்டி புடி, கட்டி புடிடா !
கண்ணாளா, கண்டபடி கட்டி புடிடா ! என்று குஷுயாக கூவும் பெண் மறு புறம்.
சும்மா இருப்பவனே இப்படி என்றால், மன்னர் சும்மா இருப்பாரா ?
கண்ணிலே மீனடி,
நெஞ்சிலே தேனடி !
என்று நக்கியர் போல் அவர் ஒரு புறம்.
தமிழ் பெண் படுகிறாள் பாடு.
காரணம், ஒரு சிறந்த பாடலில் ஒரு வரி,
காலங்களில் அவள் வசந்தம்,
கலைகளிலே அவள் ஓவியம்!
.
.
.
கனிகளிலே அவள் மாங்கனி !
அன்றி செய்த சிறு தவறினால், இன்று கனி முதல் மது வரை பெண் தான் !
பம்பரக் கண்ணு, பச்ச மொளாகா, இஞ்சி மரப்பா, இளக்க வச்சான்!
சக்கர பன்னு, ஜாவ்வு மிட்டாய், ஜிவ்வுனுதான் சினுக்க வச்சான் !
ஈ மொய்க்கும் வரிகள்.
இளந்த பலம், இளந்த பலம் உனக்கு தான்,
செக்க செவந்த பலம், செவந்த பலம் உனக்கு தான்,
பால் பழம் உனக்கு தான், பாயாசமும் உனக்கு தான்,
சக்கர உனக்கு தான், சக்கர பொங்கல் உனக்கு தான் !
சுவையான வரிகள். பெண்களின் நிலைமை இன்று ஒரு பழத்தை போல தான். கனிந்து, பழுத்து, தின்ன விட்டால் அழுகிவிடும். தின்னும் முயற்சியில் கவிஞர்கள்.
இவற்றை எழுதிக்கொண்டிரிக்கும் பொழுது, என் நினைவில் பட்ட ஒரு சரணம் ,
சாராயம், கருவாடு, துண்டு பீடி, வவ்வாலு,
குடிச, குப்ப தொட்டி, பக்கத்துல டி கட!
ரிக்க்ஷா, காத்தடி, பாட்டுளோடு மாஞ்சா,
கில்லி, கோலி, லுங்கி, பானா , கானா பாட்டு பாடலாமா?
ஆல, அஞ்சலா, பஜாரு, நிஜாரு,
கணியப்பா, முனியம்மா, கிரி, கஜா, மன்னி,
MGR, சிவாஜி, ரஜினி, கமலு,
பகிலு, பிகிலு, செவிலு, அவுலு,
All shows house fullu!
தமிழை முன்னேற்ற தமிழன் கண்ட வழிகள்!
Comments