தமிழ் ஆர்வலர்களுக்கு !
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, காடுகளில் சுற்றித்திரிந்த மனிதன் பேசிய முதல் மொழி நம் தமிழ் மொழியே. நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் என்பனவற்றை உலகிற்கு கற்றுக்கொடுத்தது நம் முன்னோர்களே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவம், கணிதம், வானவியல், புவியியல் போன்ற அறிவியல் துறைகளிலும் , இயல், இசை, நாடகம் போன்ற கலைத் திறன்களிலும், விவசாயம், விளையாட்டு, வணிகம் போன்ற அன்றாட வாழ்க்கை கலைகளிலும், சல்லிக்கட்டு, போர் போன்ற வீரதீரத்திலும் தமிழர்களே சிறந்து விளங்கினர் என்றால் அது மிகையாகாது.
வேறு கண்டகளில் மனிதர்கள் காட்டில் சுற்றித்திரிந்த போது, இங்கு நாகரீகங்கள் செழித்து வளர்ந்தன. கையசைவுகளின் மூலம் அவர் உரையாடி கொண்டிருந்தபோது இங்கே சங்கம் வைத்து புலவர்கள் இலக்கியம் படைத்து கொண்டிருந்தனர். நம் மன்னர்கள் கப்பற்படை வைத்திருந்த போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கிகொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்று திணறிக் கொண்டிருந்தனர் ஆப்பிரிக்கர்கள்
அனால் இன்றோ வேற்று மொழிகளின் ஆக்கிரமிப்புகளாலும், மத வேறுபாடுகளாலும், படை எடுப்புகளாலும், கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப்பட்டு எதோ ஒரு பகுதியினர் மட்டும் பேசும் மொழியாய் தமிழ் மாறிப் போய்கிடக்கின்றது. காரணம் நாம் நம் வரலாற்றை அலட்சியப்படுத்தி விட்டு அந்நிய மோகம் கொண்டதுதான். ஆங்கிலத்தில் உரையாடினால் உயர்வு என்ற எண்ணமும், அவர்கள் பண்பாடே சிறந்தது என்ற நம்பிக்கையும், நம் பழக்கவழக்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் அறிவியல் தெரியாமல் போனதுதான்.
"சரி ஐயா, நடந்தது நடந்து விட்டது, இப்போது நாம் என்ன செய்வது அதற்கு? நானோ கணினி துறையில் வேலை பார்க்கிறேன். என்னால் எவ்வாறு தமிழை வளர்க்க முடியும்?" என்ற ஐயம் தங்களுக்குள் தோன்றினால், தாங்களால் செய்ய முடிந்தவை சில...
௧) தமிழில் தினம் ஒரு புதிய சொல் கற்று, அந்த சொல்லையும், அதன் பொருளையும் முகபுத்தகத்தில் பதிவு செய்யுங்கள். நண்பர்கள் அதைப் பார்த்து தாமும் ஒரு சில நாட்களில் சொற்களை பதிவு செய்வார்கள்.
௨) தாங்கள் படித்த தமிழ் கவிதைகள், புத்தகங்கள் பற்றி சின்ன கட்டுரைகள் இயற்றி நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இது அவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டும்.
௩) மதிய உணவின் போது, தமிழர் வரலாறு பற்றி பத்து நிமிட விவாதங்களை நிகழ்த்தித் தெளிவு பெறுங்கள்.
௪) உறவி முறைகளை தமிழில் கற்று, அவ்வாறே அழையுங்கள். நாம் அனைவரும் கற்ற முதல் சொல் 'அம்மா'...
௫) ஆங்கிலம் கற்பது தவறல்ல, அதற்காக தமிழை தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்காமல் இருப்பதே தவறு.
௬) நண்பர்களைச் சந்திக்கும் வேலையில், கை குலுக்குவதை விட்டு விட்டு, கை கூப்பி வணங்குங்கள். இரண்டு தினங்கள் சிரிப்புக்குள்ளாவீர்கள். மூன்றாவது தினம் சிரித்தவாறே தங்கள் நண்பர்களும் கைகூப்பி வணங்குவார்கள். ஐந்தே தினங்களில் அவர்களுக்கும் அது வழக்கமாகி போகும்.
௭) முன்னோர் கற்றுக்கொடுத்த பழக்க வழக்கங்களை மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி விடாமல், அதனுள் அடங்கி இருக்கும் பயனை அறிந்து, பின்பு அதை பின்பற்றுவதா அல்ல அதை விட்டுவிடுவதா என்று முடிவு செய்யுங்கள்.
௮) வாரத்தில் ஒரு நாள் ஆங்கில உணவை அறவே தவிர்த்து, நம் மண்ணில் விளையும் தானியங்களை உண்டு மகிழுங்கள்.
௯) தமிழர் கண்ட கலை ஆயிரம் இங்கு உள்ளது. ஒன்றையாவது கற்க முயலுங்கள். கலரி, சிலம்பம், பரதம் என்று நீண்டு கொண்டே போகும் இந்த பட்டியல்.
௰) தமிழர் பண்பாடுகளை தவறாக பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.
தமிழும், தமிழரும் பழமை வாய்ந்தவை. நம்மால் அவை ஆழிந்தது என்ற இழி சொல்லுக்கு ஆளாகாமல் இருப்பதற்காவது நாம் முயற்சி செய்வோம்.
Comments
Ipudi eluthi thalreenga.. :)