பழையசோறு வெங்காயம்!
பழையசோறு வெங்காயம்,
ஓட்டை வேட்டி ஓலை குடிசை,
மண்வெட்டி ஒடிந்த தேகம்,
வயுத்துப்பசி ஒரு நேரம்!
மண்சேறு மழைக்காலம்,
மஞ்சக்கயிரும் அடமானம்,
கல்வியோ வெகுதூரம்,
பெண்ணுயிரும் அவமானம்!
தூக்குமேடை பஞ்சுமெத்தை,
பூச்சிமருந்து தேவாமிருதம்,
கள்ளிப்பால் சோமபானம்,
அவர் சாவில் நம் வாழ்வு!
- விவசாயி
Comments