அவ்வையும் நானும் !
எனக்குத் தெரிந்த அறுசுவையில் ! அவ்வையே எனது தவறை பொறுத்துக்கொள் !
அறம் செய்ய விரும்பு - அல்வா செய்ய விரும்பு !
ஆறுவது சினம் - ஆறுவது ரசம் !
இயல்வது கரவேல் - இட்லி அதை மறவேல் !
ஈவது விலக்கேல் - ஈ மொய்ப்பது பால் !
உடையது விளம்பேல் - உடைவது முறுக்கு !
ஊக்கமது கைவிடேல் - ஊத்தாபமது கைவிடேல் !
எண் எழுத்து இகழேல் - எள் உருண்டை இகழேல் !
ஏற்பது இகழ்ச்சி - ஏற்பது இறைச்சி !
ஐயம் இட்டு உன் - ஐயர் வூட்டுல மீன் !
ஒப்புரவு ஒழுகு - ஓசில சாப்பிட பழகு !
ஓதுவது ஒழியேல் - ஓட்டை வடை அழகே !
Comments