Posts

Showing posts from October, 2011

தமிழ் ஆர்வலர்களுக்கு !

இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, காடுகளில் சுற்றித்திரிந்த மனிதன் பேசிய முதல் மொழி நம் தமிழ் மொழியே. நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் என்பனவற்றை உலகிற்கு கற்றுக்கொடுத்தது நம் முன்னோர்களே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவம், கணிதம், வானவியல், புவியியல் போன்ற அறிவியல் துறைகளிலும் , இயல், இசை, நாடகம் போன்ற கலைத் திறன்களிலும், விவசாயம், விளையாட்டு, வணிகம் போன்ற அன்றாட வாழ்க்கை கலைகளிலும், சல்லிக்கட்டு, போர் போன்ற வீரதீரத்திலும் தமிழர்களே சிறந்து விளங்கினர் என்றால் அது மிகையாகாது. வேறு கண்டகளில் மனிதர்கள் காட்டில் சுற்றித்திரிந்த போது, இங்கு நாகரீகங்கள் செழித்து வளர்ந்தன. கையசைவுகளின் மூலம் அவர் உரையாடி கொண்டிருந்தபோது இங்கே சங்கம் வைத்து புலவர்கள் இலக்கியம் படைத்து கொண்டிருந்தனர். நம் மன்னர்கள் கப்பற்படை வைத்திருந்த போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கிகொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்று திணறிக் கொண்டிருந்தனர் ஆப்பிரிக்கர்கள் அனால் இன்றோ வேற்று மொழிகளின் ஆக்கிரமிப்புகளாலும், மத வேறுபாடுகளாலும், படை எடுப்புகளாலும், கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப்பட்டு எதோ ஒரு பகுதியினர் மட்டும் பேசும் மொழியாய் ...

அவ்வையும் நானும் !

எனக்குத் தெரிந்த அறுசுவையில் ! அவ்வையே எனது தவறை பொறுத்துக்கொள் ! அறம் செய்ய விரும்பு - அல்வா செய்ய விரும்பு ! ஆறுவது சினம் - ஆறுவது ரசம் ! இயல்வது கரவேல் - இட்லி அதை மறவேல் ! ஈவது விலக்கேல் - ஈ மொய்ப்பது பால் ! உடையது விளம்பேல் - உடைவது முறுக்கு ! ஊக்கமது கைவிடேல் - ஊத்தாபமது கைவிடேல் ! எண் எழுத்து இகழேல் - எள் உருண்டை இகழேல் ! ஏற்பது இகழ்ச்சி - ஏற்பது இறைச்சி ! ஐயம் இட்டு உன் - ஐயர் வூட்டுல மீன் ! ஒப்புரவு ஒழுகு - ஓசில சாப்பிட பழகு ! ஓதுவது ஒழியேல் - ஓட்டை வடை அழகே !

பழையசோறு வெங்காயம்!

பழையசோறு வெங்காயம், ஓட்டை வேட்டி ஓலை குடிசை, மண்வெட்டி ஒடிந்த தேகம், வயுத்துப்பசி ஒரு நேரம்! மண்சேறு மழைக்காலம், மஞ்சக்கயிரும் அடமானம், கல்வியோ வெகுதூரம், பெண்ணுயிரும் அவமானம்! தூக்குமேடை பஞ்சுமெத்தை, பூச்சிமருந்து தேவாமிருதம், கள்ளிப்பால் சோமபானம், அவர் சாவில் நம் வாழ்வு! - விவசாயி