இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, காடுகளில் சுற்றித்திரிந்த மனிதன் பேசிய முதல் மொழி நம் தமிழ் மொழியே. நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் என்பனவற்றை உலகிற்கு கற்றுக்கொடுத்தது நம் முன்னோர்களே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவம், கணிதம், வானவியல், புவியியல் போன்ற அறிவியல் துறைகளிலும் , இயல், இசை, நாடகம் போன்ற கலைத் திறன்களிலும், விவசாயம், விளையாட்டு, வணிகம் போன்ற அன்றாட வாழ்க்கை கலைகளிலும், சல்லிக்கட்டு, போர் போன்ற வீரதீரத்திலும் தமிழர்களே சிறந்து விளங்கினர் என்றால் அது மிகையாகாது. வேறு கண்டகளில் மனிதர்கள் காட்டில் சுற்றித்திரிந்த போது, இங்கு நாகரீகங்கள் செழித்து வளர்ந்தன. கையசைவுகளின் மூலம் அவர் உரையாடி கொண்டிருந்தபோது இங்கே சங்கம் வைத்து புலவர்கள் இலக்கியம் படைத்து கொண்டிருந்தனர். நம் மன்னர்கள் கப்பற்படை வைத்திருந்த போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கிகொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்று திணறிக் கொண்டிருந்தனர் ஆப்பிரிக்கர்கள் அனால் இன்றோ வேற்று மொழிகளின் ஆக்கிரமிப்புகளாலும், மத வேறுபாடுகளாலும், படை எடுப்புகளாலும், கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப்பட்டு எதோ ஒரு பகுதியினர் மட்டும் பேசும் மொழியாய் ...