சிவபுராணம்


ஆதியிலான் அந்தமிலான்,
ஊனுருவம் மேதுமிலான்.
நான்முகனும் மாலவனும்,
மூவுலகும் விழைந்தறியா,
ஓங்கார மந்திரமாய்,
தழற்பிழம்பாய் நீண்டிருந்தான்.

ஆடவனா பெண்ணினமா,
இரண்டுமில்லா நடுநிலையாம்.
ஓருயிராம் ஒருணர்வாம்,
அஃறிணையும் அவனினமாம்.
அனுவுள்ளும் அவனுளானாம்,
அவனுள்ளும் அவளுளாளாம்.

நான்மறையும் நவின்ற,
நான்முகனின் நாவர்க்கு,
கல்லாலின் புடையமர்ந்து,
எல்லாமும் சொன்னவனாம்.
முத்திரையால் வித்தகர்க்கு,
மெய்யுரைத்த தத்துவனாம்.

கூர்மத்தில் மந்திரமலையேற்றி,
அரவத்தால் ஆழியை கடைந்த,
தேவரும் அசுரரும் மாலும்கூட,
ஆலகாலம் கண்டு திகைக்க,
நஞ்சை கண்டத்தில் நிறுத்தி,
நீலகண்டனாய் ஆனவனாம்.

வண்ண தாரகையின் பிடியில்,
மதிமயங்கி பொலிவிழந்து,
வெட்கிக்கிடந்த அம்புலியை,
வரங்கொடுத்து மீட்டவனாம்.
தேய்பிறையும் முழுநிலவும்,
உலகிற்கு தந்தவனாம்.

மருமகனுக்கோ அழைப்பில்லை,
கோமகனுக்கும் படையலில்லை,
தக்கனின் நிந்திக்கும் யாகத்திற்கு,
பத்ரனையும் காளியையுமனுப்பி,
கண்டித்தவனாம் தண்டித்தவனாம்,
நிந்தித்தவரைத் துண்டித்தவனாம்.

உலகம் காக்க ஆயுதம் வேண்டி,
அரியும் இவன்பதம் நாடிடவே,
ஆயிரமலரில் ஒர் கருமலராய்,
தாமரைக் கண்ணை தந்திடவே,
சக்ராயுதத்தை அரிக்குத் தந்து,
இவ்வுலகை அவனே காத்தவனாம்.

வினை தீர்க்கும் நாயகமாம்,
சக்தி பெற்ற பிள்ளையார்,
சினங்கொண்டவன் தலையறுத்து,
வேழ முகத்தை யளித்தவனாம்,
பன்னிருகரமும் ஆறுமுகமும்,
வேலவனுக்குத் தந்தவனாம்.

காலைத் தூக்கி கரங்காட்டி,
அகிலத்தையும் படைத்தவனாம்,
அண்டமே கண்டு மகிழ்ந்திட,
அம்பலத்தில் நடித்தவனாம்,
அசையும் பொருள் அசைந்திட,
ஆதாரமாய் இருப்பவனாம்.

அரனாம் அந்திரனாம் அருட்சுடராம்,
ஆர்வனாம் ஆதியனாம் ஆரணனாம்,
இறையாம் இனியவனாம் இணையிலியாம்,
ஈசனாம் ஈறிலானாம் ஈடிலியாம்,
உமையவனாம் உறவிலியாம் ஊழிமுதல்வனாம்
எண்குணனாம் எந்தையாம் எருதேறியாம்,
ஏகம்பனாம் எறெறியாம் ஏழுலகாளியாம்,
ஐயனாம் ஐமுகனாம் ஐவண்ணனாம்,
சடையனாம் சிவனாம் நம் சீவனாம்,
அவன் பொற்கழல் நாம் புகவே !
- இளவழுதி, ஆத்திகம் பேசும் நாத்திகன்.

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter