Posts

Showing posts from May, 2015

குறிஞ்சித் தலைவன்

பித்தற்கொரு சத்தித் திருமகன் சித்தைதொட தித்தித் தறுமுகன் முத்திப்பெரு வித்தைக் கொருகுரு சரவணமே... முற்றுக்கரு வற்குத் திருமறை மற்றும்வுரு வற்றத் தொருநிலை கற்பித்துமு ணர்த்தித் திருவருள் புரிந்தவனே... அட்டத்திசை சுற்றித் திரிந்தெலி அத்தப்பதம் பற்றிப் புகுந்திட வெற்றிக்கனி யெட்டத் தவறிய கனிமுகனே... சுட்டப்பழம் வைத்துக் கிழவியின் பிற்பட்டத றுத்துக் குணமகள் திக்கெட்டிணை யற்றப் புகழ்பெறச் செய்தவனே... மொட்டைக்கிரி பட்டுச் சரிந்திட நத்துப்பறை கத்திக் கரைந்திட பித்துக்குளி புத்திப் பெறவரங் கொடுத்தவனே... மக்குங்கரி யொத்தப் பதுமனை குத்திக்கொலை யிட்டுக் குலவழி எட்டிப்பகை விட்டுச் செலதுணை யிருந்தவனே... சொற்பர்கறி சொர்க்கத் தமரனின் தத்தைக்கினி யத்திக் கரத்தினை பற்றிப்பல பத்தர்த் தொழதிட குன்றுமொன்றே... முட்கற்றொடு தித்துக் கழனியில் நித்தம்மமு திட்டுக் கடம்பனின் சித்தம்நிறைந் திட்டக் கனிக்கொரு திருத்தணியே... நத்தைப்பல றுத்தப் புலவரும் நித்தப்பதம் பற்றித் தமிழனில் பத்துப்பல வைத்துத் துதித்தத் தவப்பயனே. குறிப்பு: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நூலில் இடம்பெற்றுள்ள ...

சிவபுராணம்

ஆதியிலான் அந்தமிலான், ஊனுருவம் மேதுமிலான். நான்முகனும் மாலவனும், மூவுலகும் விழைந்தறியா, ஓங்கார மந்திரமாய், தழற்பிழம்பாய் நீண்டிருந்தான். ஆடவனா பெண்ணினமா, இரண்டுமில்லா நடுநிலையாம். ஓருயிராம் ஒருணர்வாம், அஃறிணையும் அவனினமாம். அனுவுள்ளும் அவனுளானாம், அவனுள்ளும் அவளுளாளாம். நான்மறையும் நவின்ற, நான்முகனின் நாவர்க்கு, கல்லாலின் புடையமர்ந்து, எல்லாமும் சொன்னவனாம். முத்திரையால் வித்தகர்க்கு, மெய்யுரைத்த தத்துவனாம். கூர்மத்தில் மந்திரமலையேற்றி, அரவத்தால் ஆழியை கடைந்த, தேவரும் அசுரரும் மாலும்கூட, ஆலகாலம் கண்டு திகைக்க, நஞ்சை கண்டத்தில் நிறுத்தி, நீலகண்டனாய் ஆனவனாம். வண்ண தாரகையின் பிடியில், மதிமயங்கி பொலிவிழந்து, வெட்கிக்கிடந்த அம்புலியை, வரங்கொடுத்து மீட்டவனாம். தேய்பிறையும் முழுநிலவும், உலகிற்கு தந்தவனாம். மருமகனுக்கோ அழைப்பில்லை, கோமகனுக்கும் படையலில்லை, தக்கனின் நிந்திக்கும் யாகத்திற்கு, பத்ரனையும் காளியையுமனுப்பி, கண்டித்தவனாம் தண்டித்தவனாம், நிந்தித்தவரைத் துண்டித்தவனாம். உலகம் காக்க ஆயுதம் வேண்டி, அரியும் இவன்பதம் நாடிடவே, ஆயிரமலரில் ஒர் கருமலர...