காதலும் திருமணமும் !

நொந்து போன கணவன் எழுதிய கடைசிக் கவிதை !
--------------------------------------------------------------------------------------
கண்ணுக்குள் கண்ணை விட்டு,
இதயத்தை திருடும் களவின் பெயர் காதல் !
பைக்குள் கையை விட்டு,
பணத்தை திருடும் களவின் பெயர் திருமணம் !


மகனை வரவேற்கும் தந்தை !
--------------------------------------------------
மனதுக்குள் கனவை விதைப்பது காதல் !
வயிற்றுக்குள் கருவை விதைப்பது திருமணம் !


தி.மு. மற்றும் தி.பி. !
------------------------------------
திருமணத்திற்கு முன்பு - காதலி அழகு !
திருமணத்திற்கு பின்பு - அவளின் தங்கை அழகு !
திருமணத்திற்கு முன்பு - காஃபி டேயும், பிட்ஸா கார்னரும் !
திருமணத்திற்கு பின்பு - நகைக் கடையும். கையேந்தி பவனும் !
திருமணத்திற்கு முன்பு - ஆபீஸில் OP !
திருமணத்திற்கு பின்பு - ஆபீஸில் OT !
திருமணத்திற்கு முன்பு - மைதிலி என்னை காதலி !
திருமணத்திற்கு பின்பு - சம்சாரம் அது மின்சாரம் !
திருமணத்திற்கு முன்பு - இளமை புதுமை !
திருமணத்திற்கு பின்பு - வயலும் வாழ்வும் !


கடவுள் மனிதனிடம் !
--------------------------------------
தற்கொலை செய்து கொள்வதற்கு, பல வழிகள் இருக்க,
ஏன் திருமணத்தை தேர்ந்தெடுத்தாய் மனிதனே ?

Comments

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter