தமிழ் மொழியே இந்தியாவின் முதல் மொழி

முன்னுரை:
தமிழ் பிராமி காலம் - 300 கி.மு. (பொருந்தலில்  கிடைத்த 490 கி.மு. தமிழ் பிராமி எழுத்துக்களை சேர்க்காமல்).
வடமொழி பிராமி காலம் - 150 - 100 கி.மு.

தமிழ் மொழியின் முதல் எழுதுகை - 200 கி.மு.
வட மொழியின் முதல் எழுதுகை - 150 கி.பி.

தமிழில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - சோழர் கால பனை ஓலைகள்
வடமொழியில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - 15 ஆம் நூற்றாண்டு (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வடமொழி நூற்பிரதியை வெளியிடுவதாகத் தகவல்).

இப்படி தமிழுக்கு பிற்காலத்தில் இருக்கும் வடமொழி எப்படி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் முந்தையதாகும் ? இங்குதான் ஐரோப்பிய ஆய்வாளர்களின் அறியாமையும் வடமொழி மாமாக்களின் சூழ்ச்சியும் அடங்கியுள்ளது.

இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம்:
இந்தியா ஐரோப்பியர்களின் பிடியில் இருந்தபோது, ஆராய்ச்சிக்காக வந்த ஐரோப்பியர்கள் இந்திய மொழிகளையும், இந்திய மொழி இலக்கியங்களையும் கண்டு வியந்தனர். குறிப்பாக வடமொழி அவர்களின் கவனத்தை ஈர்த்தது. காரணம் - ஐரோப்பிய மொழிகளுக்கும் வடமொழிக்கும் இருக்கும் ஒற்றுமை மட்டுமல்ல, கலாச்சார ஒற்றுமையும் தான். இதன் பின்னரே இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம் அறிவிக்கப்பட்டது. 



இந்த காலகட்டத்தில் தான் Mortimer Wheeler சிந்து நாகரிகத்தை பற்றி ஆராய்கிறார். சிந்து நாகரிகம் கி.மு.1800களில் நலிந்து பின்பு முடிந்து போவதை கண்டறிகிறார். இதற்கான காரணங்களை தேடத் துவங்குகிறார். இந்திய-ஈரானிய மொழி குடும்பத்தினரின் நகர்வு பற்றி அறிகிறார். 

இந்திய-ஈரானிய மொழி குடும்பத்தினரின் பூர்வீகம் இன்றைய ஆப்கானிஸ்தானுக்கு வட-மேற்கே இருக்கும் ஒரு பகுதி. கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் துவக்கத்தில் இவர்கள் பல பகுதிகளுக்கு இடம்பெயரத் துவங்குகிறார்கள். தென் மேற்கை நோக்கி இடம் பெயர்ந்த ஒரு குழு, அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அரசர்களை வென்று கி.மு 1500 களில் ஆட்சியில் அமர்கிறார்கள். இவர்களே இன்று மிட்டாணி அரசர்கள் (Mittani kingdom) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பெயர்கள் வடமொழிப் பெயர்களை போலிருப்பதய் கண்ட Mortimer Wheeler, இதே இந்திய-ஈரானியர்கள் படையெடுத்து (aryan invasion) வந்து தான் சிந்து நாகரிகம் அழிந்தது என்ற கருத்தை முன் வைக்கிறார். அவரது கருத்து ஏற்கப்படுகிறது. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சீ, இந்திய-ஈரானியர்கள் நகர்வு, மிட்டாணி அரசர்களின் பெயர்களை முன்வைத்து வடமொழி கிமு 1800-1500களில் வழக்கிற்கு வந்தது என்ற கருத்து உருவாகிறது. அதுவரை அண்டம் பிறந்தபோது உருவானது என்று சிலரால் கருதப்பட்ட ரிக் வேதத்தின் காலம் கிமு 1700-1500 என்று நிர்ணயிக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு மற்ற வடமொழி நூற்களின் காலமும் நிர்ணயிக்கப்படுகிறது. சந்தான தர்மத்தை நிலைநிறுத்த துடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை பற்றிக்கொள்கிறார்கள். அகழ்வாராய்ச்சியில் எந்த ஒரு குறியீடும் இல்லாத போதிலும், கிமு 1500 வேத காலத்தின் தொடக்கமானது.

வடமொழி-மிட்டாணி தொடர்பு:
வடமொழியின் காலம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்று முந்தைய பகுதியில் கண்டோம். வேத வடமொழிக்கும் மிட்டாணி கலாச்சாரத்திற்கும் இருந்த சில ஒற்றுமைகளை வைத்தே வேத வடமொழியின் காலம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த ஒற்றுமைகள் என்ன?

1. தேர்க் குதிரைகளை பயிற்றுவிக்கும் முறைகளை விவரிக்கும் கிக்குலி (Kikkuli) என்னும் கிமு 13 ஆம் நூற்றாண்டு நூல். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில சொற்களுக்கும் இந்திய-ஆரிய மொழி குடும்பத்தின் சொற்களுக்கும் இருக்கும் ஒற்றுமை. இந்த சொற்கள் இந்திய-ஆரிய மொழியின் தனித்துவ சொற்களல்ல, அதன் வேரான இந்திய-ஈரானிய சொற்கள் என்ற கருத்தும் உண்டு. குதிரைகள் இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினரின் எல்லா கலாச்சாரங்களின் (வேத கலாச்சாரத்திலும்) முக்கிய இடம் பெறுகிறது. சிந்து நாகரிகத்தில், குதிரைகள் அங்கம் வகித்ததற்கு சான்று ஒன்றும் கிடையாது.

2. வேத கடவுள்களுக்கும், மிட்டாணி கடவுள்களுக்கும் இருக்கும் ஒற்றுமை. இரு புறமும் மித்ரன், இந்திரன், வாயு இருக்கிறார்கள். இந்த இரு கடவுளர்களுக்கு வேர் கஸ்சைட் (Kassite) இனத்தினரின் கடவுள்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கஸ்சைட் இனத்தவர்கள் பேசிய கஸ்சைட் மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சாராமல் இருந்த போதிலும், இந்திய-ஐரோப்பிய கலாச்சார கூறுகளை கொண்டுள்ளது. இவர்களின் காலம் கிமு 15 ஆம் நூற்றாண்டு.

3. மிட்டணியை ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள். இந்த மிட்டானியர்கள் பேசிய மொழி குர்ரியன். இந்த மொழியும் இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சார்ந்தது அல்ல.

குறிப்பு: கஸ்சைட்  மொழியும் குர்ரியன் மொழியும் குர்ரோ-யுரேசியன் மொழிக்குடும்பத்தை (Hurro-Urartian language familiy) சேர்ந்தவைகள். இவைகளுக்கும் வடமொழிக்கும் தொடர்பு கிடையாது 

மொழியராய்ச்சி, ஆகழ்வாராய்ச்சி கூறும் உண்மை:
கிமு மூன்றாம் ஆயிரவாண்டின் இறுதியில், இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம் பிரிந்து இந்திய-ஈரானிய மொழிக் குடும்பம் உருவாகிறது. இந்த மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பழைய இந்திய-ஈரானியம் பேசுகிறார்கள். சில நூறாண்டுகளில், பழைய இந்திய-ஈரானியம், இந்திய-ஈரானியமாகிறது. பின்பு ஈரானிய மொழிக்குடும்பம், இந்திய-ஆரிய மொழிக்குடும்பம் என்று பிரிகிறது. இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தினர் வடமொழி பேசத்துவங்கிகின்றனர். இவர்கள் பல குழுக்களாய் நகர்ந்து இந்தியா வந்தடைகின்றனர். வடமொழி வடவர்களின் வரவேற்பை பெறுகிறது.

ஈரானிய மொழிக்குடும்பத்தின் தொடக்கம் கிமு 600 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய-ஆரிய தொடக்கமும் இந்த காலகட்டத்தில் தான் இருந்திருக்க வேண்டும். இதற்கு சான்று - ஈரானிய மொழி குடும்பத்தின் முதல் மொழியான அவெஸ்தாதிருக்கும் (Avestan), இந்திய-ஆரிய குடும்பத்தின் முதல் மொழியான வேத-வடமொழிக்கும் இருக்கும் ஒற்றுமைதான். மொழி-கலாச்சார ஒற்றுமை கொண்டு இவர்கள் மதத்தால் மட்டுமே வேறுபடுகின்றனர். வேதத்தில் தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் தீயவர்கள். அவெஸ்தத்தில் தேவர்கள் தீயவர்கள், அசுரர்கள் நல்லவர்கள் என்பது போன்ற பல வேறுபாடுகள். அவெஸ்தத்திலிருந்து தோன்றிய பழைய-பாரசீகத்திற்கும் வேத-வடமொழிக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை மொழி அறிஞர்கள் கண்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் உண்மை வேத காலம் கிமு 500க்கு முன் துவங்கி இருக்க வாய்ப்பில்லை என்பதுதான். ரிக் வேதம் இதற்கு பின்புதான் இயற்றப்பட்டிருக்க முடியும். சமயம் சார்ந்த மொழி என்பதாலேயே வடமொழி நம்பிக்கையின் அடிப்படையில் தொன்மையானது என்று கொள்ளப்பட்டது.

சரி என்ன தான் நடந்திருக்கக்கூடும் ?
➤ 70,000 ஆண்டுகளுக்கு முன், ஆபிரிக்க கண்டத்திலிருந்து முதல் மனிதர்கள் வெளியேறுகிறார்கள். கடல் வழியாக பயணிக்கும் இந்தக் குழுவில் சிலர், மத்திய-கிழக்கு நாடுகளிலும், தென்னகத்திலும்  கரையோரங்களில் குடியமர்கிறார்கள். குடியமர்கிறவர்கள், நிலப்பரப்பு முழுவதும் பரவி வாழ்கிறார்கள். மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்றடைகிறார்கள். 50,000 ஆண்டுகளுக்கு முன் ஆபிரிக்காவிலிருந்து மற்றொரு குழு நிலம் வழியாக புலம்பெயர்கிறது. இவர்களும் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தடைகிறார்கள். பின்பு பரவுகிறார்கள். - நேஷனல் ஜாக்ராபிக் ஜீனோக்ராபிக் ப்ராஜெக்ட்.

இவர்கள் தான் அம்பேத்கர் கூறும் நாகர்கள். 

➤ குடியமர்ந்த அந்த பண்டை காலங்களில், இவர்கள் எந்த ஒரு மொழியும் பேசியிருக்க வாய்ப்பில்லை. பின்னாளில் இவர்கள் பண்டைத் தமிழ் பேசத் துவங்கினார்கள். அம்பேத்கர் இவர்கள் பேசிய மொழி திராவிடம் என்கிறார்  இங்கு திராவிடம் என்னும் சொற்பயன்பாடு ஏன் தவறானது என்று வேறொரு பதிவில் தமிழன் திராவிடனா? என்ற பகுதியில் கண்டோம். தமிழ் வாய்மொழியாகவே இருந்திருக்கின்றது. அது எழுத்து வடிவமோ, குறியீடு வடிவமோ பெறாத காலம் இது. 

➤ கிமு 3500: சிந்து நாகரிகம் துவங்குகிறது. இது திராவிட நாகரிகம் (அதாவது தமிழ் நாகரிகம்) என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. கிமு 1800 வரை நீடித்த இந்த நாகரிகத்தில், தமிழ் குறியீடு வடிவம் (Symbolic as opposed to alphabetic) பெறுகிறது. சிந்து நாகரிகத்தின் முடிவில் இவர்கள் அந்தப் பகுதிகளை விட்டு நகர்ந்து கங்கை நதிக்கரையை அடைகிறார்கள்.

குறிப்பு: இன்றளவும் சிந்து நாகரீகத்தின் ஒரு சிறு பகுதியில் பிறகுயி (Brahui) என்ற திராவிட மொழி வழக்கத்தில் உள்ளது.
➤ கிமு 1000: அரியமொழி குடும்பத்தினர் இந்தியாவிற்குள் நுழைகிறார்கள். வடமொழி எழுத்து வடிவமோ, குறியீடு வடிவமோ பெறாத காலம் இது. தென்னகத்தில் தமிழ் மொழி குறியீட்டு வடிவத்தை விடுத்து எழுத்து வடிவம் பெறத்துவங்குகிறது.

➤ கிமு 600: மகாவீரரும் புத்தரும் தோன்றுகிறார்கள். வேத காலமும் துவங்குகிறது. 

➤ கிமு 500: பொருந்தலில் தமிழ்-பிராமி எழுத்துக்களின் தோற்றம். 

➤ கிமு 400: பௌத்தர்களும் சமணர்களும் பிராக்கிரதை தென்னகத்திற்கு அறிமுகம் செய்கிறார்கள்.

➤ கிமு 400-200: தமிழகம் முழுவதும் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது. சமணமலை, காரைக்குடி, மதுரை, கீழடி அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், இலங்கை அனுராதபுரம் மற்றும் பல இடங்கள் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது.

➤ கிமு 300: தமிழ் சங்க காலத்தின் தொடக்கம். 

➤ கிமு 250: அசோகர் பௌத்தத்தை தழுவுகிறார், பிராமி எழுத்துக்கள் வடக்கு நோக்கி நகர்ந்து, பிராகிருத-பிராமி தோன்றுகிறது. 

➤ கிமு 200--150: பிராமி எழுத்துக்கள் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து, வடமொழி-பிராமி உருவாகிறது. பணினியின் காலம்.

➤ கிமு 50: திருவள்ளுவரின் காலம். 

➤ கிமு முதல் நூற்றாண்டு: ரிக் வேத காலம். வடமொழி பிராமியின் முதல் கல்வெட்டு. 

➤ கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி முதல் நூற்றாண்டு வரை: மற்ற மூன்று வேதங்களும், உபநிசத்களும் இயற்றப்படுகிறது. 

➤ கிபி இரண்டாம் நூற்றாண்டு: சாதவாகனர்களின் காலம். மனு சாத்திரம் எழுதப்படுகிறது. வடமொழியை தென்னகத்திற்கு கொண்டுவருகிறார்கள். கன்னடமும் தெலுங்கும் வடமொழி கலப்பில் தமிழிலிலுருந்து பிரியத் துவங்குகின்றன.

➤ கிபி மூன்றாம் நூற்றாண்டு: தமிழ் சங்க காலம் நிறைவுபெறுகிறது. ராமாயணத்தின் காலம். 

➤ கிபி நான்காம் நூற்றாண்டு: மகாபாரதத்தின் காலம்.

➤ கிபி 100 - கிபி 500: பௌத்த-சமண குருக்களால் தமிழ் திழைக்கிறது. ஐம்பபெருங்காப்பியங்கள் உருவாகின்றன. 

➤ கிபி 600: வேத சமயம் தமிழகத்திற்குள் நுழைகிறது. தமிழ் மன்னர்களும் வடமொழிக்கு வழிவகை செய்கின்றனர். வடமொழி தமிழகத்தில் கால் பாதிக்கின்றது. 

➤ கிபி 700: பக்தி காலத்தின் துவக்கம், தனித் தமிழ் மறையத் துவங்குகிறது. 

➤ கிபி 800: வட்டெழுத்தின் பிறப்பு. 

வடமொழி தெற்கே நகர்ந்து, தமிழ் மொழியுடன் கலந்து பிறமொழிகள் உருவாகின. தமிழில் உருவாகி எழுத்து வடிவும் வடக்கே நகர்ந்து வடமொழிக்கும் எழுத்து வடிவும் கொடுக்கின்றது. இதுவே அகழ்வாராய்ச்சி கூறும் உண்மை. மற்றவை அனைத்தும் நம்பிக்கை சார்ந்ததே.

நடக்கும் வேடிக்கை:
வரலாறு இவ்வாறிருக்க, வடமொழி தான் எல்லா மொழிகளுக்கும் வேர் என்றும் ரிக் வேதம் அண்டம் தோன்றிய போதே இருந்ததென்றும் கட்டுக்கதைகள் கூறுவோர், குமரிக்கண்டத்தை மறுப்பர். சான்றுகள் ஏதும் இல்லாத போதும், கண்ணன் 8000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதுவோர், பாண்டியர்களின் வரலாற்றை மறுப்பர். துவாரகை இருந்ததற்கு சான்றுகள் இல்லாத போதும் அதை உண்மை என்று கருதுவோர் பூம்புகாரை மறுப்பர். மகாபாரதமும் ராமாயணமும் வரலாறு என்போர், சிலப்பதிகாரம் கட்டுக்கதை என்பர். ஒரே காரணம் - மதம்.

இந்த அதிமேதாவிகளின் அறிவு: வடமொழி-பிராமியால் எழுதப்பட்ட மொழி வடமொழி. பிராகிருத-பிராமியால் எழுதப்பட்ட மொழி பிராகிருதம். ஆனால், தமிழ்-பிராமியால் எழுதப்பட்ட மொழி மட்டும் திராவிடம். என்னடா அநியாயம் என்று கேட்டால், கன்னடர்களும் தெலுங்கர்களும் வரிந்துகொண்டு வந்துவிடுவார்கள் தமிழ் எங்கள் மொழிகளுக்கு முன் தோன்றவில்லை என்று. கிபி ஐந்தாம் நூற்றாண்டில் தான் இரு மொழிகள் முதல் எழுதுகைகள் கிடைத்துள்ளது.

முடிவுரை:
தமிழ் மொழியே இந்தியாவின் முதல் மொழி. தமிழ் மொழியே இந்திய மொழிகளுள் முதலில் எழுத்து வடிவம் பெற்றது. தமிழ் மொழியே இந்தியாவில் உருவான மொழி. வடமொழி பேச்சு மொழியாக இந்தியாவிற்குள் வந்து, எழுத்து வடிவம் பெற்று, சமய மொழியாக மாறி, அரசர்களின் ஆசி பெற்று, ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இந்தியாவில் வடமொழியின் காலம் கிமு 2 நூற்றாண்டிற்கு பின்பு தான். 

மேலும் படிக்க:
1. http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece
2. https://en.wikipedia.org/wiki/Early_Indian_epigraphy
3. https://scroll.in/article/737715/fact-check-india-wasnt-the-first-place-sanskrit-was-recorded-it-was-syria
4. https://en.wikipedia.org/wiki/Indo-Aryan_migration_theory
5. https://en.wikipedia.org/wiki/Brahmi_script
6. https://en.wikipedia.org/wiki/List_of_languages_by_first_written_accounts

மொழிபெயர்ப்பு: 
எழுதுகை - Inscription 
நூற்பிரதி - Manuscript 
ஆயிரவாண்டு - Millenium

Comments

Unknown said…
அருமையிலும் அருமை! தெளிந்த ஆய்வியல் நோக்கு.நன்றி அய்யா!

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter