தமிழும் சிவமும்
அனுவாய் அசைவாய் அலையாய், அறமாய் அறிவாய் அருளாய், அவளாய் அவனாய் அமரனாய், அணியாய் அகமாய் அமுதாய், ஆரகமாய் ஆருவமாய் ஆக்கமுமாய், ஆதியனாய் ஆதிரனாய் ஆழியனாய், ஆதவனாய் ஆலவனாய் ஆதிரையாய், ஆயிரமாய் ஆய்தமாய் ஆத்திசூடியாய், இமையாய் இணைப்பாய் இயக்கமாய், இயல்பாய் இணையாய் இருளாய், இன்பனாய் இனியனாய் இறப்பிலியாய், இசையாய் இயலாய் இலக்கணமாய், ஈச்சமாய் ஈட்டமாய் ஈர்ப்பாய், ஈகையாய் ஈரமாய் ஈடகமாய், ஈயுவனாய் ஈடிலியாய் ஈறிலானாய், ஈட்டியாய் ஈழமாய் ஈரடியாய், உருவாய் உடலாய் உகமாய், உணர்வாய் உண்மையாய் உய்கையாய், உரகனாய் உக்கிரனாய் உமையவனாய், உரையாய் உவமையாய் உழிஞையாய், ஊர்மியாய் ஊதையாய் ஊதிகையாய், ஊகையாய் ஊட்டமாய் ஊன்றாய், ஊனிலியாய் ஊரிலியாய் ஊழிமுதல்வனாய், ஊராய் ஊசலாய் ஊடலாய், எசமாய் எலும்பாய் எழுகாய், எழிலாய் எழுமையாய் எண்ணமாய், என்குணனாய் எருதேறியாய் எரியோனாய், எண்ணாய் எழுத்தாய் எதுகையாய், ஏடாய் ஏரடமாய் ஏடகமாய், ஏற்றமாய் ஏடையாய் ஏக்கமாய், ஏகம்பனாய் ஏறெறியாய் ஏழுலகாளியாய், ஏலாதியாய் ஏரம்பம்மாய் ஏழிசையாய், ஐம்புலனாய் ஐம்பொன்னாய் ஐம்பூதங்களாய், ஐயமாய் ஐயுணர்வாய் ஐந்துணவாய்...