பயணம் !

தாயின் ரத்தத்தில் கருவறைக்குள் விருந்து,
கண்மூடி புரண்டுகொண்டு செய்த சிறு குறும்பு,
இரண்டும் முடிந்தது தொப்பிள்கொடி அறுந்து,
தொடங்கும் உன் பயணம் போர்க்களத்திலிருந்து !

அக்கரையைத் தேடி தொடங்கும் தேடல் ஒன்று,
இருட்டான பாதைகள் உனக்கென்று பல உண்டு,
தென்றல் வந்து மோதுமென்று காத்திருப்பாய் அங்கு,
உன் கண்ணீரின் சுவையை மண்ணும் ரசிக்கும் இங்கு !

காகிதக் கப்பலில் கடலில் பயணம்,
மூடிய திரைக்குபின் சீறும் வீர வசனம்,
சதை கூட்டிற்குள் பிறக்கும் பல சலனம்,
கண்கள் இரண்டில் காதல் வரும் தருணம் !

நாடோடி மேகம் உன்னைவிட்டு ஓடோடி போகும்,
பிரிவு தரும் துன்பம் உன்னையும் ருசித்து தின்னும்,
உடைந்து நீ நொறுங்கும்போது அமைதி வந்து சேரும்,
உன் வாழ்க்கை என்னும் பயணம் அங்கு .......
.......முடிந்து போகும் !

Comments

Anonymous said…
superb man !
Anonymous said…
cool buddy.. great work.. keep writing...

Popular posts from this blog

The ninety-four shades of E.V. Ramasamy "Periyar" Naidu

Forbidden history: V.O. Chidambaram Pillai

Forbidden history: Vanchinathan, the young freedom fighter